உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடி தாக்கி குடிசையில் தீ

இடி தாக்கி குடிசையில் தீ

சங்ககிரி: சங்ககிரி, சின்னாகவுண்டனுாரை சேர்ந்தவர் பாப்பாத்தி, 65. தனியார் மில்லில் கூலி வேலை செய்கிறார். நேற்று, சங்ககிரி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மதியம், 3:50 மணிக்கு பாப்பாத்தி குடிசை வீட்டின் மீது இடி தாக்கியது. இதில் குடிசை தீப்பற்றி எரிந்தது. மக்கள் இணைந்து தீயை உடனே அணைத்தனர். இருப்பினும் துணிகள், வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.அதேபோல் இடைப்பாடி நகர பகுதிகள், அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று மதியம், 3:30 முதல், ஒரு மணி நேரத்துக்கு மேல் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் மழைநீர், சாக்கடை கழிவுநீருடன் கலந்து சாலைகளில் ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட், தாவாந்தெரு ராமர் கோவில் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் நகரின் பல இடங்களில் சிறிது நேரம் மின்சாரம் தடைபட்டது.அதேபோல் வாழப்பாடி, மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சிங்கிபுரம், ஏத்தாப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை, 9:00 மணி முதல், அரை மணி நேரம் மித மழை பெய்தது. பின் வெயில் விட்டு விட்டு அடித்தது. மதியம், 3:00 மணிக்கு மீண்டும் மிதமான மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை