சேலம் சாலையில்எரியாத விளக்குகள்
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டை, சேலம் சாலையில் விநாயகர் கோவில் அருகே மின்மாற்றி உள்ளது. அங்குள்ள மின் கம்பத்தில் உள்ள தெருவிளக்கு எரியாததால் இருள் சூழ்ந்துள்ளது. சாலை வளைவில் திரும்பும் இரு சக்கர வாகன ஓட்டிகள், இருளில் நிலைதடுமாறுகின்றனர். அதேபோல் பால் கூட்டுறவு சங்கத்துக்கு திரும்பும் சாலை வளைவில் உள்ள மின் கம்பத்திலும் விளக்கு எரியவில்லை. அங்குள்ள வேகத்தடை, இருட்டில் தெரியாததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அடுத்து, ஏ.டி.எம்., மையம் அருகே உள்ள கம்பத்திலும் மின் விளக்கு எரியாததால், மக்கள் சிரமப்படுகின்றனர். சேலம் சாலையில் மின் விளக்குகளை எரிய வைக்க, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.