உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எழுத்தறிவு கொண்டாட்டம்: சேலம் மாவட்டம் அசத்தல்

எழுத்தறிவு கொண்டாட்டம்: சேலம் மாவட்டம் அசத்தல்

ஏற்காடு: புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் ஏற்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், மண்டல அளவில் எழுத்தறிவு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி இயக்குனர் நாகராஜ முருகன் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் முன்னிலை வகித்தார்.இதில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், கற்போர், தன்னார்-வலர் என மாவட்டத்துக்கு, 25 பேர் வீதம், 100 பேர் பங்கேற்-றனர்.மேடை நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல், நாட்டுப்புற இசைக்க-ருவி இசைத்தல், பரதநாட்டியம், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கர-காட்டம் உள்ளிட்ட இதர நாட்டுப்புற நடனங்கள், குறு நாடகம், மாறுவேட போட்டி, மணல் ஓவியப்போட்டி, பாரம்பரிய கலைகள், தற்காப்பு கலைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், ஓவியம், சிறு கட்டுரை, பாரம்பரிய விளையாட்டு, பாரம்பரிய உணவு தயா-ரித்தல் போட்டிகள் நடந்தன.மேடை நிகழ்ச்சியில் சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்கள் முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தன. காட்சிகள் அமைத்தல் போட்டியில் சேலம், நாமக்கல், தர்மபுரி முறையே முதல் மூன்று இடங்களையும் பிடித்தன. அதில் பங்-கேற்றவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் கபீர், பரிசு வழங்-கினார். தொடர்ந்து பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை