உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்சிக்கொடி கட்டும்போது லாரி மோதி தொழிலாளி பலி

கட்சிக்கொடி கட்டும்போது லாரி மோதி தொழிலாளி பலி

தலைவாசல்: தலைவாசல் அருகே புத்துாரை சேர்ந்தவர் சந்திரசேகரன், 49. கூலித்தொழிலாளியான இவர், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., நேற்று பங்கேற்கவிருந்த திருமண வரவேற்பு விழாவுக்கு, சம்பேரி பஸ் ஸ்டாப்பில் உள்ள சென்டர் மீடியனில், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு கட்சி கொடி கட்டும் பணியில் இருந்தார்.அப்போது சென்னையில் இருந்து, சேலம் நோக்கிச்சென்ற லாரி, வேன் மீது மோதியது. இதில், வேனில் இரும்பு கம்பியை எடுத்து வந்த சந்திரசேகரன் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ