மேலும் செய்திகள்
ரூ.5,000 லஞ்சம்: சர்வேயர் கைது
29-May-2025
கெங்கவல்லி: திருமணமான பெண்ணை குடும்பம் நடத்த வரும்படி அழைத்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.கெங்கவல்லி, கடம்பூர், வடக்கு தெருவை சேர்ந்த, லாரி டிரைவர் கண்ணன், 29. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சூர்யா, 28, என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது. இதை அறிந்த, அப்-பெண்ணின் கணவர் ராஜேஷ், சூர்யாவை ஏற்க மறுத்துள்ளார். இதனால் சூர்யா, அவரது பெற்றோர் வீட்டில் வசிக்கிறார்.இந்நிலையில் சூர்யா, கெங்கவல்லி போலீசில் புகார் அளித்தார். அதில், 'கண்ணன், அவருடன் குடும்பம் நடத்த வரும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். இல்லை எனில் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்' என கூறியிருந்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார், நேற்று, கண்-ணனை கைது செய்தனர்.
29-May-2025