மேலும் செய்திகள்
போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
25-Sep-2025
ஏற்காடு, ஏற்காடு, அரங்கத்தை சேர்ந்தவர் ஏகநாதன், 22. சேலம், அழகாபுரம், சின்னபுதுாரை சேர்ந்தவர் ஷாலினி, 22. இருவரும் சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு படிக்கும் நிலையில் காதலித்து வந்தனர். இதற்கு இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் நேற்று தஞ்சம் அடைந்தனர். போலீசார், இருவரது பெற்றோரை அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
25-Sep-2025