ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனம்
மேட்டூர்: சுவாமி ஐயப்பன் பிறந்த உத்தர நட்சத்திர நாளான நேற்று, மேட்டூர், தங்கமாபுரிபட்டணம் தங்கமலை பாலசுப்ரமணியர் கோவில் வளாகத்தில் உள்ள தர்மசாஸ்தா கோவிலில் மகரஜோதி தரிசன விழா நேற்று நடந்தது. கணபதி ேஹாமம், மகா கும்பாபிேஷக நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஐயப்பனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 18 படிகளில் விளக்குகள் ஏற்றப்பட்டன. தொடர்ந்து ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.