உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைபாஸ் வழியே வாகனங்களை திருப்பி விட்ட மல்லுார் மக்கள்

பைபாஸ் வழியே வாகனங்களை திருப்பி விட்ட மல்லுார் மக்கள்

பனமரத்துப்பட்டி: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, மல்லுார் பிரிவில் பாலம் கட்டுமான பணிக்கு, பிரதான சாலை மூடப்பட்டது. இதனால் நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சேலம் செல்லும் வாகனங்கள், மல்லுார் டவுன் வழியே திருப்பி விடப்பட்டன. வாகனங்கள் இடைவிடாமல் வந்ததால், மல்லுார் டவுனில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மீண்டும் நெடுஞ்சாலை வழியே வாகனங்களை திருப்பி விட, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கலெக்டரிடம், மல்லுார் டவுன் பஞ்சாயத்து சார்பில் மனு அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம், சேலம் தாசில்தார் தாமோதரன் ஆய்வு செய்து, மீண்டும் நெடுஞ்சாலை வழியே வாகனங்களை திருப்பி விட, நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.இந்நிலையில் மல்லுார் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார் தலைமையில் பணியாளர்கள், மக்கள், நேற்று, நாமக்கல் மாவட்ட எல்லையில், நெடுஞ்சாலையில் இருந்த மண் தடுப்பை அகற்றினர். நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வாகனங்களை நேராக நெடுஞ்சாலையில் திருப்பி விட்டனர். மல்லுார் ஊருக்குள் வாகனங்கள் செல்லாமல், நெடுஞ்சாலையில் சென்று, பழைய பாலம் வழியே சேலம் சென்றன. இதையடுத்து, மல்லுார் டவுன் பகுதியில் பட்டாசு வெடித்து மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ