உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆர்.பி.ஐ.,யில் வேலை தருவதாக அழைத்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது

ஆர்.பி.ஐ.,யில் வேலை தருவதாக அழைத்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது

சேலம், ஆர்.பி.ஐ.,யில் வேலை வாங்கி தருவதாக, பெண்ணை புது பஸ் ஸ்டாண்ட் வரவழைத்த பட்டதாரி வாலிபர், அவரிடம் தவறாக நடக்க முயன்றதால், போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் தாரமங்கலம், சிக்கம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ், 32. பட்டதாரியான இவர், 'வேலை வாங்கி தரப்படும்' என, பேஸ்புக்கில் விளம்பரம் செய்திருந்தார். அதை பார்த்த, பள்ளப்பட்டியை சேர்ந்த ஒரு பட்டதாரி பெண், பிரகா ைஷ தொடர்பு கொண்டார். அப்போது அவர், 'ஆர்.பி.ஐ.,யில் வேலை வாங்கி தருகிறேன். அதற்கு அடையாள அட்டை தயாரிக்க வேண்டும். அதற்கு புது பஸ் ஸ்டாண்ட் வாருங்கள்' என தெரிவித்துள்ளார். அதை உண்மை என நம்பிய பெண், கடந்த, 12 காலை, 10:45 மணிக்கு, புது பஸ் ஸ்டாண்டில், ஆம்னி பஸ் நிற்கும் இடத்துக்கு வந்தார். அப்போது அங்கு வந்த பிரகாஷ், அப்பெண்ணிடம் அறிமுகமாகி, ஆவணங்கள் குறித்து கேட்டுவிட்டு பின் டீக்கடைக்கு போகலாம் என கூறினார். அப்போது அவரிடம், பல்வேறு, 'சைகை'களை செய்துள்ளார்.அதிர்ச்சி அடைந்த பெண், பிரகாைஷ திட்டி விட்டு சென்றார். தொடர்ந்து கணவரிடம் தெரிவித்தார். பின் அவர் அறிவுறுத்தல்படி, பள்ளப்பட்டி போலீசில் அப்பெண் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, நேற்று பிரகாைஷ கைது செய்தனர். விசாரணையில் அவர், தாரமங்கலம், மதுரை உள்ளிட்ட இடங்களில், இதுபோன்ற சம்பவங்களில் ஏற்கனவே ஈடுபட்டதாக, புகார்கள் பதிவாகி இருப்பது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ