வீட்டில் திருட முயன்ற நபர் கைது
சேலம்: சேலம், ஜாகீர் அம்மாபாளையம் ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி, 66. இவர் நேற்று முன்தினம் மதியம், வீட்டில் துாங்கி கொண்டு இருந்தார். அப்போது சத்தம் கேட்டு எழுந்தபோது, மர்ம நபர் ஒருவர் ஜன்னல் வழியாக கதவை திறக்க முயன்றார். இதை பார்த்த பெரியசாமி கூச்சலிட்டார். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பினார். இது குறித்து, சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, வாழப்பாடி அருகே நீர்முள்ளிக்குட்டை ராஜபட்டினம் தெற்கு பகுதியை சேர்ந்த சன்னராஜா, 37, என்பவரை கைது செய்தனர்.