வாலிபர் பல்லை உடைத்தவர் கைது
சேலம், சேலம், சிவதாபுரம், பெரு மாள் கோவில் கரட்டை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மனைவி சத்யா, 39. இவர்கள் வீடு அருகே, கடந்த மே, 31 இரவில், 4 பேர் சத்தம் போட்டு பேசிக்கொண்டிருந்தனர். இதுகுறித்து சத்யா தட்டிக்கேட்டார். அப்போது நடந்த தகராறில், சாமுவேல், சத்யாவை, அந்த, 4 பேரும் சேர்ந்து தாக்கினர். இதில் சாமுவேல் பல் உடைந்தது. அவர் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து வந்த நிலையில், நேற்று சிவதாபுரத்தை சேர்ந்த இந்திரன், 27, என்பவரை கைது செய்தனர். அவருடன் இருந்த, 3 பேரை தேடுகின்றனர்.