உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜவுளி வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது

ஜவுளி வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது

சேலம், சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் சுப்ரமணி, 77. ஜவுளி வியாபாரம் செய்கிறார். நேற்று முன்தினம் வீடு அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த, 3 பேர், அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தாக்கியதோடு, 2,000 ரூபாய், மொபைல் போனை பறித்துச்சென்றனர். இதுகுறித்து சுப்ரமணி புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரித்ததில், பெரியகிணறு, 3வது கிராஸ் பகுதியை சேர்ந்த தினேஷ், 22, அவரது கூட்டாளிகள் விக்ரம், ஹரி ஆகியோர் பறித்தது தெரிந்தது. இதில் தினேைஷ கைது செய்த போலீசார், மற்ற இருவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை