உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது

சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது

சேலம், கருப்பூர் டால்மியா போர்டு பகுதியில், சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை, அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கருப்பூர் போலீசார் நேற்று மாலை சோதனை மேற்கொண்டனர். அப்போது, மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். இதில் சேலம் கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி, 40, என்பதும், இவர் தமிழக அரசின் டாஸ்மாக் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. சுப்ரமணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து, 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை