மேலும் செய்திகள்
பொது சுகாதார குழு தலைவர், ஓசூர் மாநகராட்சி
06-May-2025
சேலம்: சேலம், எஸ்.பி., கவுதம் கோயலின் தனிப்படை போலீசார், மகுடஞ்சாவடி போலீசார் இணைந்து நேற்று, மகுடஞ்சாவடியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அங்குள்ள பஸ் ஸ்டாப்பில், சந்தேகப்படும்படி இரு சூட்கேஸ்களுடன் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த போலீசார், அவர் வைத்திருந்த சூட்கேஸ்களை சோதனை செய்ததில், 30 கிலோ கஞ்சா பண்டல்கள் இருந்தன.பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரித்ததில், கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஆலந்துார், புதுயாங்கத்தை சேர்ந்த ரத்தீஷ், 42, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரித்ததில், ஆந்திரா மாநிலத்தில் வாங்கி ரயிலில் சேலம் கடத்தி வந்ததும், பின் பஸ்சில் கேரள மாநிலம் செல்ல, மகுடஞ்சாவடிக்கு வந்ததும் தெரிந்தது.
06-May-2025