உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு வேலைக்கு போலி உத்தரவு வழங்கி ரூ.4.50 லட்சம் சுருட்டியவர் சிக்கினார்

அரசு வேலைக்கு போலி உத்தரவு வழங்கி ரூ.4.50 லட்சம் சுருட்டியவர் சிக்கினார்

மேட்டூர்:இரு பெண்களிடம், அரசு வேலைக்கு போலி உத்தரவு வழங்கி, 4.50 லட்சம் ரூபாய் சுருட்டிய, சலுான் கடைக்காரரை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் மேட்டூர், கருமலைக்கூடல், சுப்ரமணிய நகரை சேர்ந்தவர் சக்திவேல், 42; டீ விற்கும் தொழிலாளி. இவரது மனைவி தீபிகா, 38. சக்திவேல் வீடு அருகே, தீபிகாவின் சகோதரி தேன்மொழி, 42, வசிக்கிறார். சேலம், கருப்பூர், வெள்ளாளப்பட்டி, ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 28. முடிதிருத்தகம் வைத்துள்ளார். இவர் ஏற்கனவே, வெளியே சந்தித்து அறிமுகமானதன் அடிப்படையில், 2023ல், சக்திவேல் வீட்டுக்கு சென்றார். அப்போது, தான் தலைமை செயலகத்தில் அதிகாரியாக உள்ளதாகவும்; அரசு துறையில் வேலை வாங்கி தருவதாகவும் தீபிகா, தேன்மொழியிடம் கூறியுள்ளார். தொடர்ந்து, வேலை வாங்கி தருவதற்காக தீபிகாவிடம், 2.50 லட்சமும், தேன்மொழியிடம், 2 லட்சமும் 2024 ஜூன், ஆக., மாதம் பெற்று, வேலைக்கான பணி ஆணையை, 'வாட்ஸ் அப்'பில் இருவருக்கும் அனுப்பினார். அந்த உத்தரவுடன் இருவரும், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வேலைக்கு சேர சென்றபோது தான், மணிகண்டன் வழங்கியது போலி பணி ஆணை என தெரிந்தது. இருவரும், மணிகண்டனிடம் பணத்தை திரும்ப கேட்டபோது, மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து சக்திவேல், சேலம் எஸ்.பி., கவுதம் கோயலிடம் புகார் செய்தார். அவரது உத்தரவுப்படி நேற்று கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை