உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இரவில் கிராம மக்கள் துரத்தியதால் குவாரி குட்டையில் விழுந்தவர் பலி

இரவில் கிராம மக்கள் துரத்தியதால் குவாரி குட்டையில் விழுந்தவர் பலி

ஓமலுார்: சேலம் அருகே சந்தேகப்பட்டு மக்கள் துரத்தியதால், இருட்டில் ஓடிய வாலிபர், குவாரி குட்டையில் தவறி விழுந்ததில் பலி-யானார்.சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே, கோட்டமேட்டுப்பட்டி பஞ்., குள்ளமநாயக்கன்பட்டி கிராமத்தில், உரிமம் முடிந்த செயல்படாத, 100 அடி ஆழ குவாரி குழியில் உள்ள தண்ணீரில் ஒருவர் இறந்து கிடப்பதாக, ஓமலுார் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. தீயணைப்பு வீரர்களால் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்த பிலவேந்திரன் மகன் விஜய், 21, வெல்டர் என தெரியவந்-தது.இதுகுறித்து ஓமலுார் போலீசார் கூறியதாவது: இறந்த விஜய்யின் அண்ணன் செல்வம், ஓமலுார் நாரணம்பாளையம் பகுதியில் அவ-ரது மாமனார் வீட்டில் இருந்துள்ளார். அங்குள்ள ஜெயராக்கினி கோவில் திருவிழாவுக்கு விஜய் மற்றும் நல்லம்பள்ளியை சேர்ந்த, 17 வயது சிறுவன், மேகநாதன், 19, வந்துள்ளனர். மூன்று பேரும் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் குவாரி அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்ததால், அப்பகுதி மக்கள் மூன்று பேரையும் பிடித்து, திருட்டு சம்பவம் அடிக்கடி நடக்கிறது. ஏன் இங்கு இருக்கிறீர்கள், நீங்கள் யார் என கேட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மூவரையும் மக்கள் தாக்கியுள்ளதாக தெரிகிறது. அவர்களிடமிருந்து விஜய், மேகநாதன் தப்பி ஓடினர். சிறுவனை மட்டும் ஓமலுார் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறுவ-னிடம் விசாரணை நடத்தி, தப்பிச் சென்ற மற்ற இருவரது உறவி-னரிடம் தகவல் அளித்து வரச் சொல்லி, சிறுவனை அவரது பெற்-றோரிடம் ஒப்படைத்துள்ளனர். ஓடிப்போன விஜய் மட்டும் வீட்-டுக்கு வரவில்லை. கல் குவாரியில் இரவு நேரம் என்பதால், வழி தெரியாமல் ஓடி சென்ற போது, உள்ளே விழுந்து இறந்திருக்-கலாம் என தெரிய வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை