உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொலை வழக்கில் சிக்கி ஜாமினில் வந்தவர் மாயம்

கொலை வழக்கில் சிக்கி ஜாமினில் வந்தவர் மாயம்

தொப்பூர், சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வி.மோட்டூரை சேர்ந்தவர் வேலு, 50. இவரது மனைவி லட்சுமி, 45. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பரோட்டா மாஸ்டரான வேலு கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன், ஓசூரில் வேலைக்கு சென்றபோது, கொலை வழக்கு ஒன்றில் கைதாகினார். கடந்த, 3 மாதத்திற்கு முன் ஜாமினில் வந்தவர், அவ்வப்போது, ஓசூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கையெழுத்திட்டு வந்தார்.நேற்று முன்தினம் இரவு வி.மோட்டூரில் இருந்து, தர்மபுரி மாவட்டம், கோடுஹள்ளி பஞ்., கருங்கல்லுார் கிராமத்திற்கு மது குடிக்க தொப்பையாறு அணை நீர்த்தேக்கத்தை பரிசலில் கடந்து வந்துள்ளார். மீண்டும் இரவு, 10:00 மணியளவில் நீர்த்தேக்கத்தை கடந்து செல்ல முயன்றபோது, பரிசல் இல்லாததால், நீர்த்தேக்கத்தை நீந்தி கடந்து சென்றதாக கூறப்பட்ட நிலையில், வேலு மாயமானார். நேற்று காலை வரை வீட்டிற்கு வராத நிலையில், கருங்கல்லுார் பகுதியிலுள்ள கரையில், வேலுவின் ஆடைகள் மட்டும் இருந்தன.இது குறித்து, அவரது மனைவி லட்சுமி, காடையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையில், 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொப்பையார் அணை நீர்த்தேக்க பகுதியில் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ