உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தலைமறைவாக இருந்தவர் 10 மாதங்களுக்கு பின் கைது

தலைமறைவாக இருந்தவர் 10 மாதங்களுக்கு பின் கைது

கெங்கவல்லி: கெங்கவல்லியில், 2024 மார்ச், 23ல், காரை சேதப்படுத்தியது தொடர்பாக, இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அளித்த புகாரில், 25 பேர் மீது, 9 பிரிவுகளில், கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்தனர். இதில், 10 பேரை கைது செய்தனர். 14 பேர் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றனர். மீதி ஒருவரான, பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை, தொண்டபாடியை சேர்ந்த, ராமலிங்கம், 47, தலைமறைவாக இருந்தார். நேற்று, அவர் சொந்த ஊர் வந்தார். இதை அறிந்த, கெங்கவல்லி போலீசார், நேற்று அங்கு சென்று, அவரை, 10 மாதங்களுக்கு பின் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி