இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மா.திறன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆத்துார், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஆத்துார் தாலுகா அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இணை செயலர் அழகுவேல் தலைமை வகித்தார். அதில் இலவச வீட்டுமனை பட்டா; ரேஷன் கடையில், 35 கிலோ அரிசி வழங்குதல்; மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை அதிகரித்து வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட தலைவர் அமலாராணி, செயலர் குணசேகரன், துணைத்தலைவர் கந்தன், தாலுகா பொருளாளர் வளர்மதி உள்பட பலர் பங்கேற்றனர்.வைத்தார். இம்முகாம் அனைத்து வங்கி கிளைகளிலும், டிச., 31 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.