கோரையாறு மேம்பால பகுதியில் மருத்துவ, இறைச்சி கழிவு குவிப்பு
ஆத்துார்: ஆத்துார், புதுப்பேட்டை வழியே செல்லும் சேலம் -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கோரையாற்றின் குறுக்கே மேம்பாலம் உள்ளது. அதற்கு கீழ் குப்பை கொட்டி தீ வைப்பதால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால், 'குப்பை கொட்டி தீ வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்-தது. ஆனால் அந்த பலகை காற்றில் விழுந்து கிடக்கிறது. இருப்பினும் ஆத்துார், புதுப்பேட்டை, துலுக்கனுார் பகுதியை சேர்ந்தவர்கள், நீரோடை பாலத்தில் தொடர்ந்து குப்பை, ஆயில் கழிவை கொட்டுகின்றனர். தவிர பாலத்தின் கான்கிரீட் பில்-லர்கள், தீ தாக்கத்தில் விரிசல் ஏற்பட்டு ஒரு பகுதியில் விழுந்துள்-ளது. இந்நிலையில் காலாவதி மருந்துகள், பயன்படுத்திய, பயன்படுத்-தாமல் உள்ள மருத்துவ கழிவு, ஆங்காங்கே குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளது. கண்ணாடி பாட்டில்கள் அடங்கிய மருத்-துவ கழிவும் உள்ளன. அத்துடன் காலி மதுபாட்டில்களும் சிதறி கிடக்கின்றன. ஆடு, கோழி, மாடு போன்ற இறைச்சி கழிவையும் சாக்கு மூட்டைகளில் கட்டி வீசியுள்ளனர். பாலத்தின் இருபுறமும் அதிக-ளவில் குப்பை குவிந்துள்ளதால், அந்த வழியே வாகன ஓட்-டிகள், பாதசாரிகள் செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது.ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் கூறுகையில், ''இரவில் கழிவு கொட்டி வருகின்றனர். மருத்துவ கழிவு உள்-ளிட்ட அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.