உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் சண்முகா மருத்துவமனை சார்பில் மருத்துவ கருத்தரங்கம்

சேலத்தில் சண்முகா மருத்துவமனை சார்பில் மருத்துவ கருத்தரங்கம்

சேலம், சேலத்தில், சண்முகா மருத்துவமனை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களிலிருந்து, 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர், அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை, வயிறு, குடல், கல்லலீரல், பித்தப்பை, கணையம், உணவுக்குழாய், கேன்சர் போன்ற உறுப்புகளுக்கு நவீன மருத்துவம் மற்றும் நுணுக்கங்கள் பற்றி விவாதித்தனர்.சேலம் சண்முகா மருத்துவமனை ஏற்பாட்டில், 'சான்கான் 3.0' மருத்துவ கருத்தரங்கம் ரேடிசன் ஹோட்டலிலும், ரோபோடிக் அறுவை சிகிச்சை செயல்முறை பயிற்சி சண்முகா மருத்துவமனையிலும் நடந்தது.சண்முகா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பன்னீர்செல்வம், முதன்மை செயல் அதிகாரி டாக்டர் பிரபு சங்கர், நிர்வாக இயக்குனநர் டாக்டர் பிரியதர்ஷினி, தரண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் செல்வராஜ், டாக்டர் வித்யா, டாக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.டாக்டர் கிருஷ்ணா செட்டி, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கருத்தரங்கில், 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்று, அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை, வயிறு, குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம், உணவுக்குழாய் மற்றும் புற்றுநோய் தொடர்பான நுணுக்கமான மருத்துவ முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை