உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜன. 4-மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தலைவர் பாலாம்பிகை தலைமை வகித்தார். அதில், பணியில் சேரும்போது, 2 மணி நேர வேலை என கூறப்பட்ட நிலையில் தற்போது, 8 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்ற முறையை மாற்றுதல்; அடையாள அட்டை, சீருடை வழங்குதல்; மகப்பேறு விடுமுறை; அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சி.ஐ.டி.யு., மாநில குழு உறுப்பினர் வெங்கடாபதி வைரமணி, அங்கன்வாடி சங்க மாவட்ட செயலர் வசந்தகுமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை