உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் நடும் விழா

மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் நடும் விழா

ஆத்துார்: ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சிறு ரக தாவரவியல் பூங்கா பகுதியில், 50 வகை மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் சந்திரசேகர் தலைமை வகித்தார். பசுமை மைய செயல் தலைவரான, ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலர் மணி, நேற்று, அவரது பிறந்த நாளையொட்டி, 50 வகை மரக்கன்றுகளை நட்டார்.தொடர்ந்து அவர் பேசுகையில், 'அத்தி, ஆச்சான், நறுவிலி, எழிலைபாலை, இயல்வாகை, மகாகனி, கடம்பை, அரசு, கருமருது, நொச்சி, கூந்தல் பனை உள்பட 50 வகை மரக்கன்றுகளை பிறந்த நாளில் நட்டது மகிழ்ச்சி. இந்த மரங்களின் நன்மை, அதன் மருத்துவ குணங்கள் அறிந்து கொள்ளவும், மரம் நடவை ஊக்கப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மரங்கள் உதவும்,'' என்றார்.தொடர்ந்து, தலைமை ஆசிரியர் சந்திரசேகர் பேசுகையில், ''நாட்டில் முதல்முறை, ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தான், மூலிகை தோட்டம், நட்சத்திர தோட்டம், மாணவர்கள் பிறந்த நாள் தோட்டம் அமைத்து பராமரிக்கப்படுகிறது,'' என்றார்.தமிழக மாநில விவசாயிகள் சங்க, மாநில செயலர் ராமசாமி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ