மேலும் செய்திகள்
மோட்டார் ஒயர் திருடிய இரண்டு பேர் கைது
04-Sep-2024
தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே கோட்டைமேட்டை சேர்ந்தவர் மணி, 48. இவரது மாமா மகன் முருகன், 35, மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர், டெல்லியில் உள்ள தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் அங்கிருந்து கோட்டைமேட்-டுக்கு வந்துள்ளார். தாரமங்கலம் மார்க்கெட்டில், மூட்டை துாக்கும் வேலை செய்து கொண்டு, மணி வீட்டில் தங்கி வந்தார்.இரண்டு நாட்களுக்கு முன்பு, வேலைக்கு சென்ற முருகன் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தாரமங்கலம் கைலாஷ் நகரில், கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக அப்-பகுதி மக்கள், தாரமங்கலம் போலீசுக்கு நேற்று தகவல் அளித்-தனர். இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் ஓமலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர்பாபு தலைமையில் வீரர்கள் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி ஆண் சடலத்தை மீட்டனர்.கிணற்றில் இறந்து கிடந்தது முருகன் என்பது உறுதியானது. மணி புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Sep-2024