மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்
சேலம்,: சேலம், அய்யம்பெருமாம்பட்டி, கக்கன் காலனியை சேர்ந்தவர் சின்னப்பன் மகள் சுமதி, 49. இவர் உடல்நிலை சரியின்றி, மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியேறிய அவர், வீடு திரும்பவில்லை. சின்னப்பன் உள்ளிட்ட குடும்பத்தினர், எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தங்கை தனம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.