உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீரை பார்க்க மட்டுமே முடிகிறது

மேட்டூர் அணை நீரை பார்க்க மட்டுமே முடிகிறது

மேட்டூர்: கொளத்துாரை சேர்ந்த விவசாயிகள் சின்னராஜ், நாகராஜ், ராஜேந்திரன் ஆகியோரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு, 'மேட்டூர் அணை உபரி நீரை வேண்டுவோர் விவசாயிகள் நலச்சங்கம்' தொடங்கப்பட்டது. அதன் முதல் கூட்டம் நேற்று, அதே பகுதியில் நடந்தது. வனவாசி வட்டார விவசாயிகள் நலசங்க செயலர் ரமேஷ் தலைமை வகித்தார்.கொளத்துார் ஒன்றியத்தை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள், 'மேட்டூர் அணை கரையோரம் உள்ள ஊராட்சிகளில், 10,000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. விவசாயிகளால், மேட்டூர் அணை நீரை பார்க்க மட்டுமே முடிகிறது. பயிர் சாகுபடிக்கு பயன்படுத்த முடியவில்லை' என வேதனை தெரிவித்தனர்.முடிவில், மேட்டூர் அணை நீரை கொளத்துார் ஒன்றியத்தில், 11 ஊராட்சிகளில் உள்ள, 17 ஏரி, குளம், குட்டைகளில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்தல்; அணை கரையோரம் உள்ள கோட்டையூர், சேத்துக்குழி, சென்றாய பெருமாள் கோவில் அடிவாரம் ஆகிய இடங்களில் நீரேற்று நிலையம் அமைத்து பாசனத்துக்கு நீரை வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை