உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முழு கொள்ளளவில் இருந்து மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

முழு கொள்ளளவில் இருந்து மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

மேட்டூர், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் தொடர்ச்சியாக வந்ததால் கடந்த, 29 மாலை, 6:00 மணிக்கு, மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடியாகவும், நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்து நிரம் பியது. முழு கொள்ளளவில் இருந்த அணை நீர்மட்டம், 3 நாட்களுக்கு பின், நேற்று காலை, 8:00 மணிக்கு, 119.01 அடியாகவும், மாலை, 4:00 மணிக்கு, 119.80 அடியாகவும் சரிந்தது. அதேபோல் நீர்இருப்பு, 93.32 டி.எம்.சி.,யாகவும், மாலையில், 93.15 டி.எம்.சி.,யாகவும் சரிந்தது.நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 35,500 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று மாலை, 18,615 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து நேற்று முன்தினம் மாலை, 31,000 கனஅடியாக இருந்த நீர்திறப்பு, நேற்று மாலை, 24,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதில் அணை மின் நிலையங்கள் வழியே, 22,300 கனஅடி, 16 கண் மதகில் உபரியாக, 1,700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ