உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு நீர்வரத்து 17,596 கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு நீர்வரத்து 17,596 கனஅடியாக உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் நீர்திறப்பு குறைக்கப்பட்டது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழக-கர்நாடகா எல்லையிலுள்ள நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் காவிரியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதற்கேற்ப நேற்று முன்தினம் வினாடிக்கு, 6,445 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 17,596 கனஅடியாக அதிகரித்தது. நேற்று டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. சாகுபடிக்கான பாசன நீர் தேவை குறைந்ததால் வினாடிக்கு, 12,000 கனஅடியாக இருந்த டெல்டா நீர் திறப்பு நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, 10,000 கனஅடியாகவும், இரவு, 8:00 மணிக்கு, 7,000 கனஅடியாகவும் குறைக்கப்பட்டது. நேற்று காலை டெல்டா நீர்திறப்பு வினாடிக்கு, 3,000 கனஅடியாக மேலும் குறைக்கப்பட்டது. வினாடிக்கு, 700 கனஅடியாக இருந்த கால்வாய் நீர்திறப்பு, 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர்திறப்பை விட வரத்து கூடுதலாக இருந்ததால் நேற்று முன்தினம், 89.26 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 89.92 அடியாக சற்று உயர்ந்தது. ஒன்றரை மாதத்துக்கு பின் மேட்டூர் அணை நீர்மட்டம் சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ