உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர் இருப்பு ஒரே நாளில் 2 டி.எம்.சி., சரிவு

மேட்டூர் அணை நீர் இருப்பு ஒரே நாளில் 2 டி.எம்.சி., சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் அளவு குறைந்ததால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 10,642 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 6,619 கனஅடியாக சரிந்தது.அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 23,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக உள்ளதால் நேற்று முன்தினம், 114.14 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 113.12 அடியாக சரிந்தது. அதேபோல், 84.43 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று, 82.92 டி.எம்.சி.,யாக சரிந்தது. நீர்வரத்து சரிவால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை