மேலும் செய்திகள்
100க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில் ஐக்கியம்
07-Jul-2025
ஓமலுார், ஓமலுார் ஒன்றியத்தில் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், மாங்குப்பை, மூங்கில்பாடி, வெள்ளாளப்பட்டி, சக்கரசெட்டிபட்டி, சிக்கனம்பட்டி பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கும் பணியை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து மூங்கில்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 34.75 லட்சம் ரூபாய் மதிப்பில், இரு வகுப்பறை கட்டடங்கள் உள்பட, 4.22 கோடி ரூபாய் மதிப்பில், 9 புது வளர்ச்சி திட்ட பணிகளை, அமைச்சர் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து கலெக்டர் பிருந்தாதேவி, ''4 ஆண்டுகளில், ஓமலுார் ஒன்றியத்தில், 344 கோடி ரூபாய் மதிப்பில், 5,644 வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,'' என்றார். ஓமலுார் ஒன்றிய செயலர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
07-Jul-2025