உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கருக்கலைந்ததால் பெண் விபரீதம்: ஆர்.டி.ஓ., விசாரணை

கருக்கலைந்ததால் பெண் விபரீதம்: ஆர்.டி.ஓ., விசாரணை

காரிப்பட்டி: காரிப்பட்டி, கூட்டாத்துப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஹரிஹரசுதன், 23, பரமேஸ்வரி, 20. இவர்களுக்கு ஓராண்டுக்கு முன் திருமணமானது. பரமேஸ்வரி, 3 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், கர்ப்பம் கலைந்தது.தொடர்ந்து மருத்துவர் பரிந்துரைப்படி மாத்திரை எடுத்துக்கொண்டு வந்தார். ஆனால் கடந்த, 25ல் பரமேஸ்வரி, அவரது தாய் வீட்டில் இருந்தபோது, பல மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கர்ப்பம் கலைந்ததால் பரமேஸ்வரி மன உளைச்சலில் இருந்தார். திருமணமாகி ஓராண்டே ஆவதால் சேலம் ஆர்.டி.ஓ., விசாரிக்கிறார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி