உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழந்தைகள் இல்லத்தில் மாயமான சிறுமி மீட்பு

குழந்தைகள் இல்லத்தில் மாயமான சிறுமி மீட்பு

சேலம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த பிரவின்குமாரின், 13 வயது மகள், சேலம், அய்யந்திருமாளிகை, அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி, மணக்காட்டில் உள்ள அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார்.தீபாவளிக்கு, பெற்றோர் வீட்டுக்கு சென்ற சிறுமியை, நேற்று மீண்டும் இல்லத்துக்கு கொண்டு வந்து, பெற்றோர் விட்டனர். காலை, 10:45 மணிக்கு வெளியே சென்ற சிறுமி, மீண்டும் திரும்பி வரவில்லை. குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் ஷாயிதாபானு, 59, கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.போலீசார், அருகே உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமி நின்றிருந்த காட்சியை பார்த்து, அங்கு சென்று அவரை மீட்டு, ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். பின் பெற்றோரை வரவழைத்து, சிறுமியை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை