மாயமான மாணவி உறவினர் வீட்டில் மீட்பு
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே கடம்பூரை சேர்ந்த, 13 வயது மாணவி, தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 2ல், அவரை காணவில்லை. அதே பகுதியை சேர்ந்த, 18 வயது சிறுவன் கடத்தியிருக்கலாம் என, சிறுமியின் பெற்றோர், கெங்கவல்லி போலீசில் புகார் அளித்தனர். ஆனால் நேற்று, ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டில் இருந்த மாணவியை, போலீசார் மீட்டனர். விசாரணையில் பெற்றோர் அடிக்கடி சண்டையிட்டு வந்ததால், மாணவி உறவினர் வீட்டுக்கு சென்றது தெரிந்தது. பின் மாணவியை ஒப்படைத்த போலீசார், பெற்றோருக்கு உரிய அறிவுரை வழங்கினர்.