மேலும் செய்திகள்
13 தாலுகாவில் மறியல் போராட்டம் 282 வருவாய் கிராம ஊழியர் கைது
15 hour(s) ago
டிஜிபி டெம்பிள் டவுன் திறப்பு விழா
15 hour(s) ago
இன்ஸ்பெக்டர் இடமாற்றம் பணிக்கு திரும்பிய வக்கீல்கள்
15 hour(s) ago
ஓமலுார்:பா.ம.க.,வை சேர்ந்த, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், கடந்த 11ல் ஓமலுார் போலீஸ் ஸ்டேஷன் முன் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, ஓமலுார் அருகே அரசமரத்துக்காட்டில் நிழற்கூட இடிப்பு விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய போலீஸ் மறுப்பதாக குற்றஞ்சாட்டினார்.தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், 'சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரிடம் வசூல் வேட்டை நடத்துகிறார்' என குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து சேலம் மாநகர போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்தனர்.அதன்பின், இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை, மேற்கு மண்டலம் கோவைக்கு மாற்றி, கமிஷனர் விஜயகுமாரி, நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.அதுபோல இன்ஸ்பெக்டரின் நடவடிக்கை குறித்து உயரதிகாரிகள் பார்வைக்கு கொண்டு வராத, சூரமங்கலம் நுண்ணறிவு பிரிவு எஸ்.எஸ்.ஐ., செல்வத்தை இரும்பாலைக்கும், அங்கு பணியாற்றிய ராஜ்குமார், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago