உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காடு அரசு பழங்குடியின பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு

ஏற்காடு அரசு பழங்குடியின பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு

ஏற்காடு: ஏற்காட்டில் உள்ள, பழங்குடியின அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ., சித்ரா ஆய்வு செய்தார்.ஏற்காட்டில், பழங்குடியின நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி-யவர், பெத்தநாயக்கன் பாளையம் நெய்யமலையை சேர்ந்த இளையகண்ணு, 37. இவர், பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்-தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. சேலம் மாவட்ட குழந்-தைகள் பாதுகாப்பு நலக்குழு அதிகாரிகள் விசாரித்த நிலையில், கொண்டலாம்பட்டி மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, இளையகண்ணுவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின் அவரை, சேலம் மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் சுகந்தி பரி-மளம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.இந்நிலையில், நேற்று ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா அந்த பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி மாணவிக-ளிடம் உரையாடி, தங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால் தெரிவிக்கலாம் என்றார். அதை தொடர்ந்து, குழந்தைகளை பாது-காப்பாக பார்த்து கொள்ளுமாறு தலைமை ஆசிரியரிடம் சித்ரா கூறினார். அ.தி.மு.க., மாவட்ட இளைஞரணிதுணைத் தலைவர் ரவிசந்திரன், மாவட்ட பிரதிநிதி பாலு, சுரேஷ்-குமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ