உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலையில் நடந்து சென்றவர் மீது மொபட் மோதி டிரைவர் பலி

சாலையில் நடந்து சென்றவர் மீது மொபட் மோதி டிரைவர் பலி

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, திருவள்ளுவர் சாலையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நிஷால்பாபு, 52. இவர், நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு சேலத்தில் இருந்து ஜூபிடர் மொபட்டில், பனமரத்துப்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தார். ஹெல்மெட் அணியவில்லை.ஒண்டிக்கடை பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்ட, பனமரத்துப்பட்டி, குரும்பர் தெருவை சேர்ந்த மைக் செட் உரிமையாளர் பன்னீர்செல்வம், 50, பின்புறம், மொபட் மோதியது. இதில் கால் முறிவு, படுகாயமடைந்த பன்னீர்செல்வம், சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதேநேரம் தடுமாறி விழுந்ததில் காயமடைந்த நிஷால்பாபு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், நேற்று காலை உயிரிழந்தார். பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ