மொபட் திருடன் கைது
சேலம்: சேலம், களரம்பட்டி, நேதாஜி தெருவை சேர்ந்தவர் கோவிந்த-சாமி, 20. இவர் நேற்று முன்தினம் வீடு முன் நிறுத்தியிருந்த, 'டியோ' மொபட் திருடுபோனது. இதுகுறித்து அவர் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து, புதிய சுண்ணாம்பு சூளை, ஒத்த முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், 19, என்பவரை கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும், 2 பேரை, போலீசார் தேடுகின்றனர்.