மேலும் செய்திகள்
ஆட்டோ டிரைவரை கரம்பிடித்த செவிலியை
03-Sep-2025
ஓமலுார்:ஓமலுார், மானத்தாள், ஓலைப்பட்டியை சேர்ந்த, தறித்தொழிலாளி சக்திவேல், 45. இவரது மனைவி ப்ரியா, 30. இவர்களது மகன்கள் மிதுன் கிருஷ்ணன், 12, யுகேஷ், 10. இருவரும் அரசு பள்ளியில் படிக்கின்றனர். சில நாட்களாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் சண்டை ஏற்பட்டது.சிறிது நேரத்தில் தனது இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு, ப்ரியா வீட்டை விட்டு வெளியே சென்றார். எங்கு தேடியும் அவரை காணவில்லை. இதனால் நேற்று சக்திவேல் புகார்படி, தொளசம்பட்டி போலீசார் தேடுகின்றனர்.
03-Sep-2025