உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இளைஞர் அணி மாநில மாநாடு கட்சியினருக்கு எம்.பி., அழைப்பு

இளைஞர் அணி மாநில மாநாடு கட்சியினருக்கு எம்.பி., அழைப்பு

தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் எம்.பி., பார்த்திபன் அறிக்கை:முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 'திராவிட மாடல்' அரசு அமைந்தபின், 'எல்லோருக்கும் எல்லாம்' எனும் கொள்கைப்படி எண்ணற்ற நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். பெண்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், இளைஞர்கள் பயன்பெறும்படி, பல்வேறு திட்டங்களை தீட்டி, நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உயர்த்தியுள்ளார்.அமைச்சர் உதயநிதி, விளையாட்டுத்துறையை மேம்படுத்த, உலகமே வியந்து பார்க்கும்படி, 'செஸ் ஒலிம்பியாட் - 2023' போட்டியை நடத்தியுள்ளார். தற்போது, 'கேலோ இந்தியா' போட்டிகளை, அவரது தலைமையில் விளையாட்டுத்துறை நடத்துகிறது. தொகுதிக்கு ஒரு மைதானம் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, இளைய தலைமுறையை விளையாட்டில் சர்வதேச அளவில் சாதனை படைக்க செய்துவருகிறார். அவரது தலைமையில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடக்கும் தி.மு.க., இளைஞரணி, ௨வது மாநில மாநாட்டில் அணி அணியாய் திரண்டிடுவோம். மாநில உரிமை மீட்பு மாநாட்டில் பங்கேற்று, எதிர்கால தமிழகத்தை வளமையாக்குவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை