விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்களுக்கு எம்.பி., ஆறுதல்
மேட்டூர்:கொளத்துார், கண்ணாமூச்சி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை திட்ட பணிகளை முடித்து நேற்று மாலை சரக்கு வேனில் சென்ற பெண் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கினர். இதில், 28 பேர் காயம் அடைந்தனர். அவர்களில், 3 மேல் சிகிச்சைக்கு, பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பிய நிலையில், 23 பெண் தொழிலாளர்கள், வேன் டிரைவர் கிருஷ்ணன், உதவியாளர் என, 25 பேர் மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ளனர். அவர்களை நேற்று மதியம், தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி சந்தித்து பழங்கள், பிரட் வழங்கி ஆறுதல் கூறினார். மாவட்ட துணை செயலர் சம்பத், கொளத்துார் ஒன்றிய செயலர் மிதுன், மேட்டூர் நகரம், கொளத்துார் ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.