இளம்பிள்ளையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரசு பஸ் இயக்க நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
மகுடஞ்சாவடி: இடங்கணசாலை நகராட்சி கூட்டம் அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம்:துணைத்தலைவர் தளபதி: பல வார்டுகளில் தெருவிளக்கு பிரச்னை உள்ளது. தலைவர் இரவு, 7:00 மணிக்கு, அனைத்து வார்டு களுக்கும் செல்ல வேண்டும். 100க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் பழுதாகியுள்ளன.தி.மு.க., கவுன்சிலர் சரஸ்வதி: குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய பள்ளம் தோண்டி மூடாமல் விட்டுள்ளனர்.தி.மு.க., கவுன்சிலர் நதியா: மக்களே எங்கள் வார்டில் அங்கன்வாடி, வணிக வளாகம் வேண்டாம் என்கின்றனர். தி.மு.க., கவுன்சிலர் நாகராஜ்: இளம்பிள்ளையில் இருந்து ஈரோடு, கரூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சென்னை போன்ற வெளி மாவட்டங்களுக்கு, அரசு பஸ் இயக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.அனைத்து கோரிக்கைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தலைவர் கமலக்கண்ணன் கூறினார். நகராட்சி கமிஷனர் பவித்ரா, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.