3 மாத சம்பளம் கேட்டு நகராட்சி ஆபீஸ் முற்றுகை
ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. அங்கு டெங்கு, மலேரியா தடுப்பு பணிகளுக்கு, 29 ஒப்பந்த பணியாளர்கள் பணி-புரிகின்றனர். அவர்கள் நேற்று, நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்று-கையிட்டு, 3 மாத சம்பள நிலுவை தொகை, கூலி உயர்வு கேட்டு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி கமி-ஷனர் சையதுமுஸ்தபாகமால்(பொ), பேச்சு நடத்தினார்.அப்போது, 'சம்பளம் பெற, ஒப்பந்த நிறுவனத்திடம் பேசி நடவ-டிக்கை எடுக்கப்படும். கூலி உயர்வு குறித்து துறை அதிகாரிக-ளுக்கு தகவல் அளிக்கப்படும்' என்றார். இதனால் ஒப்பந்த பணி-யாளர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.