மேலும் செய்திகள்
ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்தவர் தற்கொலை
31-Jul-2025
சேலம், வீராணம், குள்ளம்பட்டியை சேர்ந்தவர் திருமலை, 26. இவர், கடந்த ஆண்டு, ஒரு கொலை வழக்கில் வீராணம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் கிடைக்கவில்லை. இதனால் வேதனையில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு பிளேடால் கழுத்து, கை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக அறுத்து தற்கொலைக்கு முயன்றார். கண்காணிப்பு பணியில் இருந்த வார்டன், திருமலையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
31-Jul-2025