கொலை, திருட்டு சம்பவம்: 2 பேருக்கு குண்டாஸ்
சேலம்:சேலம், கந்தம்பட்டி, ராஜீவ் நகரை சேர்ந்தவர் பிரபு, 32. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்லப்பனுக்கும் முன் விரோதம் இருந்தது. கடந்த செப்., 8ல், பிரபு, அவரது கூட்டாளி குமரவேலுடன் சேர்ந்து, வீட்டில் துாங்கி கொண்டிருந்த செல்லப்பனை மரக்கட்டையால் தாக்கி கொன்று விட்டனர். சூரமங்கலம் போலீசார், பிரபு, குமரவேலை, 11ல் கைது செய்தனர். தொடர்ந்து நேற்று, பிரபு, குண்டர் சட்டத்தில், ஓராண்டுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரம், புலகாண்டூரை சேர்ந்தவர் தர்மராஜ், 45. இவர், கடந்த செப்., 10ல், சேலம், நரசோதிப்பட்டி, என்.கே.என்., நகரில் ஆளில்லாத வீட்டில் பூட்டை உடைத்து, 56 பவுன், 95,000 ரூபாயை திருடிச்சென்றார். சூரமங்கலம் போலீசார், அவரை கைது செய்தனர். தொடர்ந்து நேற்று, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.