உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலையில் தேசிய மாநாடு

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலையில் தேசிய மாநாடு

சேலம், சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலையில் மனித வள மேம்பாட்டு பிரிவு சார்பில், சுகாதார தொழில் கல்வி, பயிற்சி குறித்த தேசிய மாநாடு, 'வி லீட் 25' பெயரில் இரு நாட்கள் நடத்தப்பட்டது. இது, ஹெச்.ஆர்.டி.சி., வி.எம்.ஆர்.எப்., (டியு) ஆல் வழிநடத்தப்பட்ட, அனைத்து மகளிர் அமைப்பு குழுவின் முன்முயற்சி. மேலும் சுகாதார தொழில் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் தலைமை, அறிவு, பங்களிப்புகளின் கொண்டாட்டமாக நிற்கிறது என, விழாவில் தெரிவிக்கப்பட்டது.தமிழ்நாடு கூடுதல் இயக்குனர் விஜயலட்சுமி(யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ்) தலைமை விருந்தினராக பங்கேற்றார். தொடக்க விழாவுக்கு விநாயகா மிஷன் ஆராய்ச்சி அறக்கட்டளை அறங்காவலர் அருணாதேவி சந்திரசேகர் தலைமை வகித்தார். விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை இணை துணை வேந்தர் சபரிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.பல்கலை கல்வி இயக்குனர் ராஜன் சாமுவேல், ஏற்பாட்டு தலைவர், தீப்தி சாஸ்திரி, செயலர் மாயா ரமேஷ் உள்பட, நாடு முழுதும் புகழ்பெற்ற நிறுவனங்களின் வள நபர்கள், சுகாதார வல்லுனர்கள், அனைத்து சுகாதார தொழில் கல்லுாரிகளில் இருந்து ஆசிரிய உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ