டில்லியில் தேசிய சிலம்பம் ஆத்துார் மாணவர்கள் அசத்தல்
ஆத்துார், :இளைஞர் விளையாட்டு சிலம்ப கூட்டமைப்பு சார்பில், தேசிய சிலம்ப போட்டி, கடந்த, 21, 22ல், டில்லியில் நடந்தது. அதில் சேலம் மாவட்டம் ஆத்துார் வசிஷ்டா சிலம்ப கலை கழக மாணவ, மாணவியர், 8 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களை வென்றனர். அதன்படி, 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பிரசன்னா, மோஹித், அனுஷ்கா தங்கம்; 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் அனிஷ், ரித்திஷ் தங்கம்; தர்ஷன், கவினேஷ் வெள்ளி; ஹாரீஸ்ராஜ், பிரனேஷ் வெண்கலம்; 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சிருஷ்டி, ரித்திஷ் தங்கம்; தன்ஷிகாஸ்ரீ, தனிஷ்கா வெண்கலம்; 19 வயது பிரிவில் ஜனனி தங்கம் வென்றனர். இவர்கள் நேற்று, ரயில் மூலம் ஆத்துார் ஸ்டேஷனுக்கு வந்தனர். பெற்றோர், உறவினர்கள், மக்கள் வரவேற்று மாலை அணிவித்து, மாணவ, மாணவியர், பயிற்சி அளித்த அன்பரசுவை பாராட்டினர்.