மேலும் செய்திகள்
ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர் பலி
09-Apr-2025
சேலம்:வீரபாண்டி - சேலம் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே, 45 வயது மதிக்கத்தக்க, ஆண் சடலம் கிடப்பதாக, ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில், சட்டீஸ்கர் மாநிலம் கன்கெர் பகுதியை சேர்ந்த கரண்குமார் உசேன்டி என்பதும், கூலி வேலைக்கு தமிழகம் வந்ததும் தெரிந்தது. ரயிலில் வரும் போது தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Apr-2025