உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் நல்லது எதுவும் நடக்கவில்லை

4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் நல்லது எதுவும் நடக்கவில்லை

ஓமலுார், விலைவாசி, மின் கட்டண உயர்வை கட்டுப்படுத்த தவறிய, தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், ஓமலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட காடையாம்பட்டியில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி தலைமை வகித்தார்.அதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:கடந்த, 4 ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், தவறு மட்டும் நடந்துள்ளது. நல்லது எதுவும் நடக்கவில்லை. உறுப்பினர்களை சேர்க்கிறோம் என, வீடுகள் தோறும் சென்று கதவை தட்டுகின்றனர். மக்கள் துரத்தி அனுப்புகின்றனர். ஓ.டி.பி., கேட்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 ஆண்டுகளில், 40 லட்சம் கோடி ரூபாய் கடனை வாங்கியுள்ளனர். மக்களுக்கான ஆட்சி தந்த ஒரே முதல்வர், இ.பி.எஸ்., தான். கும்மிடிப்பூண்டிலிருந்து குமரி வரை சாலைகளை அகலப்படுத்தி, பல பாலங்களை கட்டியவர். இன்னும், 7 மாதங்களில், தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது.இவ்வாறு அவர் பேசினார்.புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல், ஒன்றிய செயலர் சுப்ரமணி, நகர செயலர் ஆனந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை