உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம்:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மையம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் தங்கமணி தலைமை வகித்தார்.அதில் போர்க்கால அடிப்படையில் காலி இடத்தை நிரப்புதல்; கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு வழங்குவது போன்று, குறைந்தபட்ச ஓய்வூதியம், 6,750 ரூபாய் வழங்குதல்; தேர்தல் வாக்குறுதிப்படி, காலமுறை ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்தல், ஈட்டிய; 10 ஆண்டு பணி நிறைவு செய்த சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு அளித்தல் என்பன உள்பட, 10 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாநில செயலர் வைத்தியநாதன், மாவட்ட பொருளாளர் சொர்ணலதா, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி