மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
13-Nov-2024
சேலம்:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில், மாவட்ட அளவில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் லட்சுமி தலைமை வகித்தார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் சுரேஷ் பேசுகையில், ''சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதோடு பணி ஓய்வுக்கு பின் அவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 9,000 ரூபாய் வழங்க வேண்டும். தனியார் மூலம் செயல்படுத்தப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என்றார்.சிறு விடுப்பு எடுத்து நடந்த உண்ணாவிரதத்தில், தகுதி வாய்ந்த சத்துணவு சமையலருக்கு அமைப்பாளர் பதவி உயர்வும், உதவியாளருக்கு சமையலர் பதவி உயர்வும் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட துணைத்தலைவர்கள் கலாவதி, பழனிசாமி, செல்லையா, இணை செயலர்கள் கவிதா, மகேஸ்வரி, புனிதவதி, அமுதா உள்பட பலர் பங்கேற்றனர்.
13-Nov-2024